சென்னை
தமிழகத்தின் தலைநகரம், தென் இந்தியாவின் Metro city மெரீனா கடற்கரை, மாமல்லபுரம், வள்ளுவர் கோட்டம், எம்.ஜி.ஆர் சமாதி, அண்ணா சமாதி என பல சுற்றுலா தலங்களை கொண்டது.
சிதம்பரம்
சிவபக்தர்களின் பழைமை வாய்ந்த சிறப்புமிக்க நடராஜர் ஆலயம். அருகே 11 கீ.மீட்டர் தூரத்தில் பிச்சாவரம்; உலகின் இரண்டாவது மிகப் பெரிய மாங்ரோ சதுர்ப்பு நிலக்காடுகள் நடுவே படகுச்சவாரி என ஒரு ஆச்சரிய அனுபவம்.
வேளாங்கன்னி
கடற்கரையோரம் அமைந்துள்ள அற்புதங்கள் நிறைந்ததாக கூறப்படும் மாதா ஆலயம் கிறிஸ்தவர்கள் மட்டுமன்றி அனைத்து மதத்தவர்களும் வழிபடும் ஆன்மீகத் திருத்தலம்.
தஞ்சாவூர்
இலங்கையை வென்று இமயம் முதல் குமரி வரை ஆண்ட தமிழ் மன்னன் இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோயில் தமிழர்களின் கட்டடக்கலையையும், தொண்மையையும் பறைசாட்டும் ஆயிரம் வருட பிரமாண்டம்.
திருச்சி
மலைமேல் அமர்ந்துள்ள உச்சிப் பிள்ளையார், இந்தியாவின் மிகப்பெரிய கோபுரத்தைக் கொண்ட ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமிகள் ஆலயம், சமயபுரம் மாரியம்மன் போன்ற திருத்தலங்களை கொண்டது.
மதுரை
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட மதுரை மீன்ட்சிஅம்மன் ஆலயம் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் என பல சிறப்புகளை கொண்டது.
ஆதரப்பள்ளி
அருவிகள் ஆறுகள் என இயற்கையின் அனைத்து அழகுகளையும் காணலாம். இவ் அழகை தாங்கள் பல திரைப்படங்களில் கண்டு மகிழ்ந்திருப்பீர்கள். இது சேரநாட்டின் இயற்கை அதிசயம்.
குருவாயூர்
கேரளாவின் சிறப்புப்பெற்ற கிருஸ்ணர் கோயில். இக்கோயில் ஆயிரம் வருடங்கள் பழமை வாய்ந்தது. கேரள மக்கள் மட்டுமன்றி அனைத்து இந்து சமயத்தவர்களும் வந்து வழிபடும் திருத்தலம்
ஊட்டி
மலைகளின் இளவரசி என அழைக்கப்புடும் ஊட்டி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் உற்பட பூக்களும் அதிசய மரங்களும் அருவிகளும் என இயற்கை செழிப்பின் அழகுகளை தன்னகத்தே கொண்ட வியப்பு.
வேலூர்
தங்கக்கோயில் என அழைக்கப்படும் இந்த் லஷ்மி நாராயணி பொற்கோவிலின் அழகு ஆன்மீக வாதிகளுக்கு பெருமை சேர்க்கும்.
ஓகெனைக்கல்
கர்நாடக தமிழ்நாட்டு எல்லையில் மலைகளின் நடுவே ஓடும் காவிரி நதியீன் அழகிய காட்சி பிரமாண்ட அருவி அதனூடே நாம் செல்லும் பரீசல் படகு ஓட்டம் எம்மை ஆச்சரியப்படுத்தும் அழகிய அனுபவம்
குற்றாலம்
மூலிகை செடிகள் நிறைந்த அழகிய மலைத்தொடர்களிடையே சாரல் மழையில் அருவியில் குளிப்பதென்பது வாழ்வின் ஆனந்தம். இம் மலைத்தொடர் கேரளாவையும் தமிழ்நாட்டையும் பிரிக்கிறது.
கன்னியாகுமரி
வான் புகழ் வள்ளுவன் கடலின்  நடுவே அருகில் விவேகானந்தர் தியானம் செய்த கடற்பாறை கண்கொள்ளா காட்சியாக சூரியதோயம்  கடல் பயணம் என தமிழர்களின் தொன்மை புதைந்துஉள்ள குமரிமுனை
ஆலப்புழா
கேரளாவின் இயற்கை அழகில் மிகநீண்ட நீர்ப்பாதையில் குளிரூட்டப்பட்ட படகு வீட்டில் அறுசுவை உணவுடன் கூடிய ஓரு நாள் அனுபவம் வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாத வாழ்வின் ஆனந்தம்
அதிசயம்
மதுரை நகரத்தில் 20  க்கு  மேற்பட்ட தண்ணீர் விளையாட்டுகளுடன்  உள்ள ஓரு நாள் அதிசய வாழ்வு இது சிறுவர்களுக்கும் பிடிக்கும் அனைவருக்குமான விளையாட்டு உலகம் 
மூனார்
கேரளாவின் மலை கூட்டங்களின் சொர்க்கம் பச்சை நிற ஆடை போர்த்திய தேயிலை தோட்டங்களும், பூத்தோட்டங்களும் தங்கள் அழகை காண உங்களையும் அழைக்கிறது 
காஞ்சிபுரம்
பட்டு நெசவுகள் அதிகம் கொண்ட பட்டு சேலைகளின் பிறப்பிடம் இது. இங்கு காஞ்சி காமாட்சி அம்மன் அருள் பாலிக்கும் அம்மன் கோவில் சிறப்புபெற்றது 
மைசூர்
மைசூர்
மைசூர்
கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூர் பிரசித்திப்பெற்ற மைசூர் அரண்மனை, வனவிலங்கு காட்சியகம், காவிரியை தடுக்கும் கிருஸ்ணசாகர் அணை என பல சுற்றுலா பிரசித்தங்களை கொண்டது. மைசூர் சில்க் சேலை இங்கு பிரபல்யம்.
பெங்களுர்
பெங்களுர்
பெங்களுர்
கர்நாடகத்தின் தலை நகரான இங்கு நாம் கான பல சுற்றுரா தரங்கள் உள்ளன தகவல் தொழில் நுட்பத்தின் தலைநகரான இங்கு நாம் shopping செய்வது மிகச்சிறந்த அனுபவம்.
Tour Pacages